அசுவிணிகள்

 

தாக்குதலின் தன்மை
 • இவை இலை மற்றும் வாழை மட்டைகளின் இடுக்குகளில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சி சேதம் விளைவிக்கின்றன.

 • அசுவுணிகள் ஒரு வகை தேன் போன்ற திரவத்தைச் சுரப்பதால் அதைச் சுற்றி எந்நேரமும் எறும்புகள் மொய்த்துக் கொண்டிருக்கும்.

 • அசுவுணிகள் கும்பலாக வாழையின் மீது அமர்ந்து சாற்றை உறிஞ்சுவதால் வளர்ச்சி பாதிக்கப் படுகின்றது.‌

 • இளம் பருவத்தில் நோய் தாக்கிய வாழைக்கன்றுகள் முட்டையாகவும், இலைகள் சிறுத்தும், இலை நரம்புகள் தடித்தும் காணப்படும்.

 • வா‌ழையில் அதிக அளவு சேதம் ஏற்படுத்தும் ‘முடிக்கொத்து’ நோயைப் பரப்பும் காரணிகளாக இவை இருக்கின்றன.

 

பூ‌‌‌‌‌‌‌‌‌‌‌ச்சியை கண்டறிதல்

முட்டைகள்: அசுவுணிகள் முட்டையிடுவது இல்லை நேரடியாகக் குஞ்சுகளை பொரிக்கின்றன.
இளம் குஞ்சுகள்: நீள்வட்ட வடிவில் சற்று நீண்டிருக்கும். செம்பழுப்பு நிறத்தில் ஆறு பிரிவுகளுடைய உணர் கொம்புகளைக் கொண்டிருக்கும்.
முதிர் பூச்சிகள்: சிறிய மற்றும் நடுத்தர அளவுடைய அசுவுணிகள் சிவப்‌பு முதல் அடர் பழுப்பு, பளபளப்புடன் சிலசமயங்களில் கருமை நிறத்தில் காணப்படும். இ‌‌வையும் ஆறு பிரிவுடைய உணர் கொம்புகளை‌யும், நன்கு தெரியக் கூடிய நரம்புகளையும் பெற்றிருக்கும்.
முதிர்ந்த பெண் பூச்சிகள் ஒவ்வொரு நாளும் (முதிர்ச்சியடைந்த பின்) குஞ்சு பொரிக்கின்றன. நாளொன்றுக்கு 4 என்ற விதம் இதன் வா‌‌‌‌ழ்நாளில் 14 நாட்கள் வரை ஒரு பெண் அசுவுணி உற்பத்தி செய்கின்றது.

 

கட்டுப்பாடு முறைகள்
உழவியல் முறைகள்
 • வயலைச் சுத்தமாகப் பராமரிக்க‌‌‌வும்.
 • ஆரோக்கியமான கன்றுகளைத் தேர்வு செய்து நடவும்.
 • தாக்கப்பட்டுள்ள வாழைகளை கண்ட தருணத்திலேயேய வயலிலிருந்து அகற்றி அழிக்கவும்.
 • இவ்வயல்களில் மறுதாம்பு விடுவது மற்றும் ஊடுபயிர் சாகுபடி செய்தல் கூடாது.
 • நடவு செய்வதற்கு பூச்‌சித் தாக்குதலற்ற நல்ல பயிரிலிருந்து கன்று எடுக்கவும்.
 • வாழை இலை மற்றும் பூவினை 49 செ வெந்நீரில் 10 நிமிடங்கள் வைத்திருந்தால் அசுவுணிகள் இறந்துவிடும்.
இரசாயன முறைகள்
 • இளம் கன்றுகள், இலை, இலை காம்புகள், சுருண்ட இலை ஆகியவற்றின் மீது சோப்பு தண்ணீர் அல்லது பூச்சிக் ‌கொல்லிக‌ளுடன் சோப்புநீர் கலந்து தெளிக்கவும்.
 • டைமெத்தோயேட் (75மிலி/100லி) அல்லது டையசினோன் (1.5மி.லி/லி) அல்லது அசிப்பேட் (1.3கி/லி) பாதிக்கப்பட்ட பயிர் மற்றும் கன்றுகளின் மீது தெளிக்கவும்‌.
 • மெத்தில் டெமட்டான் 25 இ.சி 0.05.‌% அல்லது மோனோகுரோட்டோபாஸ் 36 எஸ் எல் 0.072% தெளிக்கவும்.
 • மோனோகுரோட்டோபாஸ் 36 எஸ்.எஸ்/ 1 மிலி/ வாழை (1 மிலி/4 மிலி நீரில் கலந்தது) ஊசி ‌‌மூலம் செலுத்தவும். வா‌‌‌‌ழையில் பூ வெளி வந்திருந்தால் ஊசி இடுவதைத் தவிர்க்கவும்.
‌உயிரியல் கட்டுப்பாடு
 • பிரக்கோனிட் குளவிகளான லைசிமெலிபிய‌ஸ் டெஸ்‌டாசெயிபஸ் என்ற ஒட்டுண்ணியை வயலில் விடவும்.
 • மேலும் பொறி வண்டுகள், கண்ணாடி இழை இறக்கைப் பூச்சி போன்றவை அசுவுணிகளை அதிகம் விரும்பி உண்ணக்கூடியவை.
 • பூஞ்சான் வகையைச் சார்ந்த பிவே‌ரியா பேசியானாவையும் வாழை வயலில் விடலாம்.

 

பூச்சிக்கொல்லி மருந்து சிகிச்சை

களை எடுக்கும் பருவத்தில் இலை உறைக் கருகல் நோய் தாக்க வாய்ப்பு உண்டு. அந்நோய் தாக்காமல் நெற்பயிரைக் கட்டுப்படுத்தும் முறைகளை வேளாண்துறை அறிவித்துள்ளது.

அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் வாகைக்குளம், பிரம்மதேசம், மன்னார்கோவில், சிவந்திபுரம், விக்கிரமசிங்கபுரம் பகுதியில் நெல் பயிரில் இலை உறைக் கருகல் நோய் பரவலாக ஆங்காங்கே காணப்படுகிறது. இந்நோயை விவசாயிகள் கட்டுப்படுத்த கீழ்கண்ட முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

agri2

நோய் பரவும் காரணிகள்

வயல் வெளிகளிலும், சுற்றுப்புறங்களிலும் நிரந்தரமாகக் காணப்படும் புல் மற்றும் களைச் செடிகளில் இருந்து இந்த நோய் எளிதில் நெல் பயிருக்கு பரவுகிறது. மேலும் இந்நோய் மண் மூலமாகவும், அதிகமான ஈரப்பதம் காரணமாகவும், மிதமான வெப்பம் இருக்கும் சூழல் மற்றும் பாசன நீர் மூலம் அடுத்த வயல்களுக்கும் பரவும் தன்மை கொண்டது.

நோயின் அறிகுறிகள்

 • நோயின் தாக்குதல் முதலில் நீரின் மேற்பகுதியில் உள்ள இலை உறையின் ஓரங்களில் காணப்படும். இலைகளில் முட்டை வடிவத்தில் சாம்பல் பச்சை நிறத்தில் புள்ளிகள் காணப்படும்.
 • பின்பு அவை வெண்ணிறப் புள்ளிகளாய் மாறும்.
 • மேலும் தாக்கப்பட்ட பகுதிகளில் பழுப்பு நிற கடுகு போன்ற பூஞ்சாண விதைகளைக் காணலாம்.
 • இப் புள்ளிகள் ஒன்றாக இணைந்து படை படையாகத் தென்படும்.
 • இலைகளின் பெரும்பகுதி தாக்கப்படும்போது இலை கரிந்து மடிந்து விடும்.

கட்டுபடுத்தும் முறைகள்

வயல்வெளிகள், சுற்றுப்புறங்களில் புல் மற்றும் களைச் செடிகள் இல்லாதவாறு சுத்தமாக பார்த்துக் கொள்ள வேண்டும். சதுர நடவு (திருந்திய நெல் சாகுபடி) மேற்கொள்வதன் மூலம் இந்நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

தழைச்சத்து உரங்களை சமமாகப் பிரித்து இட வேண்டும். நோய் தாக்கிய வயலில் இருந்து அடுத்த வயலுக்கு நீர் பாய்ச்சக் கூடாது. டிரைக்கோடெர்மா விரிடி என்ற இயற்கை ஒட்டுண்ணிகளின் வளர்ச்சியையும் இனப்பெருக்கத்தையும், ஊக்குவிக்கும் வகையில் நிலத்திற்கு அதிக அளவில் இயற்கை தழைச் சத்து உரங்களை இட வேண்டும்.

பூச்சிக்கொல்லி மருந்து சிகிச்சை

இந்த நோயை நன்கு கட்டுப்படுத்தக் கூடிய கார்பன்டாசிம் (50 டபுள்பி) என்ற பூசணக் கொல்லி மருந்தை ஏக்கருக்கு 200 கிராம் என்ற அளவில் நடவு செய்த 45 முதல் 50 நாள்களுக்குப் பிறகு, அல்லது நோய் பாதிப்பு தென்பட்ட உடனும் மீண்டும் 15 முதல் நாள்கள் இடைவெளியில் 200 லிட்டர் நீரில் கலந்து பயிரின் அடிப்பாகத்தில் உள்ள இலை உறைகள் மற்றும் தண்டுப்பகுதி நன்கு நனையும் வகையில் 2 முதல் 3 முறை தெளிக்க வேண்டும்.

அல்லது ஏக்கருக்கு ஹெக்சோகோனசோல் 5 சதவிகிதம் இசி 500 மில்லி அல்லது புரோப்பிகோனசோல் 25 சதவிகிதம் இசி 200 மில்லி என்ற அளவில் நோய் தோன்றிய உடன் தெளிக்க வேண்டும். அல்லது அசோசிஸ்டிரோபின் என்ற பூசணக் கொல்லி மருந்தை 200 மிலி என்ற அளவில் தெளித்தும் கட்டுப்படுத்தலாம் என்றனர் அவர்கள்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வேளாண் உதவி இயக்குநர் சை.சுந்தரம், வேளாண் அலுவலர் செ.பரத்வாஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு

சிறுநீரில் இருந்து கிடைக்கும் உரம் (struvite)

சிறுநீரில் இருந்து struvite எனப்படும் உரத்தை பிரித்து எடுக்கலாம் என்பதை பற்றி முன்பு படித்து உள்ளோம்.
நேபாளில் எளிமையான இயந்திரங்களை கொண்டு சிறுநீரில் இருந்து உரத்தை பிரித்து எடுக்கும் முறையை பற்றிய ஒரு வீடியோ இங்கே பார்க்கலாம்.

இந்த ஆராய்ச்சி சுவிட்சர்லாந்தில்  உள்ள பல்கலை கழகத்தால் செய்ய பட்டது

வீடியோ முடிவில் struvite  மூலம் சாகுபடி செய்யப்பட்ட  மா,காய்கறிகளை பார்க்கலாம்.

நம் நாட்டில் பஸ் ஸ்டாண்ட் மற்றும்  ரயில் நிலையங்களில் சிறுநீரை சேகரித்து இந்த தொழிற்நுட்பம் மூலம் struvite தயாரித்தால் ரசாயன உர தேவை குறையும்.. யாராவது செயல் படுத்துவார்களா?

பார்த்தீனியம் செடியை உரமாக்குவது எப்படி?

தர்மபுரி மாவட்டத்தில், விவசாய நிலங்களில், பார்த்தீனியம் செடிகள் அதிகளவு வளர்ந்துள்ளது. இதனால், அந்த செடிகளை எப்படி உரமாக மாற்றுவது என்பது பற்றி, வேளாண் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில், நெல், கரும்பு, தக்காளி, மஞ்சள், மரவள்ளி கிழங்கு, பருத்தி மற்றும் கேழ்வரகு, சாலை உள்ளிட்ட பயிர்கள் மற்றும் தென்னை அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. காய்கறிகள் மற்றும் மலர் வகைகளும் குறிப்பிட்டு அளவு, சாகுபடி நடக்கிறது

Courtesy: Hindu
Courtesy: Hindu

 

 

 

 

 

 

 

 

இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், விவசாய நிலங்களில், பார்த்தீனியம் செடி வேகமாக பரவி வருகிறது. இதனால், விவசாய சாகுபடி குறைந்து வருவதுடன், கால்நடைகளும், விவசாயிகளும், பாதிக்கப்பட்டு வரும் அவல நிலை உள்ளது. இதுகுறித்து, வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:

 • உழவியல் முறைப்படி, இளம் பார்த்தீனியம் செடிகளை, கையால் வேரோடு பறித்து, எரித்து விடலாம்.
 • பார்த்தீனியம் செடிகளை பூப்பதற்கு முன், மக்கவைப்பத்தின் மூலம், விதைகளின் முளைப்பு திறனை அழிக்கலாம்.
 • இந்த முறையில், பார்த்தீனியம் செடிகளை கத்தி மூலமாக, சிறு சிறு துண்டுகளாக வெட்டி, தரையில், 10 செ.மீ., உயரத்துக்கு அடுக்க வேண்டும்.
 • அதன் மேல், டிரைக்கொடெர்மா விரிடி, பூஞ்சான காரணியை பரப்பி அதன் மேல் அரை சதம் யூரியா கரைசலை தெளிக்க வேண்டும்.
 • இவ்வாறு, ஒரு மீட்டர் உயரத்துக்கு அடுக்கி, மண்ணை கொண்டு பூசி மூடவேண்டும். இரு வாரங்களுக்கு பின், ஒரு முறை நன்றாக கிளறி விடவேண்டும். இதன் மூலம், 40 நாட்களில், இது, சத்துமிக்க உரமாகி விடுகிறது.
 • இவ்வாறு தயாரிக்கப்படும் மக்கிய உரத்தை, எல்லா பயிர்களுக்கும் இடலாம். இந்த முறையில் பார்த்தீனியம் கட்டப்படுத்தவதோடு, அவற்றை உரமாக மாற்றுவதன் மூலம் இரட்டிப்பு பயன் அடையமுடியும்.

பார்த்தீனியம் சிலருக்கு அலர்ஜி உண்டாக்கும். அவர்களுக்கு மூச்சி திணறல், தோல் பிரச்னைகள், தும்மல், ஜுரம்  வரலாம். உங்களக்கு இந்த பிரச்னை இருந்தால் பார்த்தீனியம் அருகே செல்லாதீர்கள். இந்த அலர்ஜி இல்லாதவர்களிடம் கூறி செடிகளை பிடுங்க சொல்லுங்கள்

பூண்டு கழிவுகளில் இயற்கை உரம்

பெரியகுளம் பகுதியில் குப்பைக்கு போகும் வெள்ளைப்பூண்டு கழிவுகளை, இயற்கை உரமாக்கி, விவசாயிகள் மகசூலை அதிகரிக்கின்றனர்.

வடுகபட்டி, தாமரைக்குளம் பகுதிகளில் தொடர்ந்து ரசாயண உரங்கள் பயன்படுத்தப்பட்ட நிலங்கள், ஐந்தாண்டுகளுக்கு பிறகு வளம் குறைந்து விளைச்சல் பாதிக்கிறது. அதன் பிறகு விவசாயிகள் மண்பரிசோதனை செய்து மண்ணின் வளத்தை அதிகப்படுத்த சிரமப்படுகின்றனர்.

garlic

 

 

 

 

இதை தவிர்க்க, விவசாயிகள் மண்ணை உழுது இயற்கை உரங்களான மாட்டுசாணம், புண்ணாக்கு கரைசல் ஆகியவற்றை போட்டு, சணம்பு உள்ளிட்ட கீரைச்செடிகளை பயிர் செய்கின்றனர். இத்துடன் இலவசமாக கிடைக்கும் வெள்ளைப்பூண்டு கழிவுகளை இயற்கை உரமாக பயன்படுத்தி, அதிகளவு விளைச்சல் பெறுகின்றனர்.

இதுகுறித்து விவசாயி தனபால் கூறுகையில், “”பூண்டின் அனைத்து பகுதிகளும் மக்களுக்கு பயன்படுகிறது. இலவசமாக கிடைக்கும் வெள்ளைப்பூண்டு கழிவுகளை சேகரித்து, நிலத்தில் கொட்டி உழுகும் போது, மண்ணில் தீங்கு விளைவிக்கும் வேர்புழுக்கள் சாகுகின்றன. மண்ணின் வளமும் அதிகரிக்கிறது. இதனால் வாழை, கரும்பு, தென்னை உள்ளிட்ட பயிர்களின் விளைச்சல் அதிகரிக்கிறது,” என்றார்.

செலவின்றிக் கிடைக்கும் இயற்கை உரம்!

குப்பைக் கிடங்கில் சேகரமாகும் குப்பை பண மதிப்பற்றதாகக் கருதப்படுகிறது. குப்பையைச் சரியாகப் புரிந்துகொள்ளாததால்தான் இப்படி நினைக்கிறோம். கழிவும் காசாகும் என்று செயல்படுத்திக் காட்டியிருக்கிறார்கள் திருவள்ளூர் அருகேயுள்ள தலக்காஞ்சேரி விவசாயிகள்.

உள்ளாட்சி அமைப்புகள் குப்பையைச் சேகரிக்கவும், பிறகு எடுத்துச் செல்வதற்கும், சேமிப்பதற்கான இடத்துக்கும் பெரும் செலவு செய்கின்றன. குப்பைக் கிடங்குகளால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது, துர்நாற்றம் வீசுகிறது, கொசு உற்பத்தி அதிகரிக்கிறது, நோய்கள் பெருக வழிவகுக்கிறது. குப்பை கொட்ட இடமில்லாத நிலையில், சாலையோரங்கள், நீர்நிலைகள் போன்ற இடங்களிலும் குப்பை கொட்டப்படுகிறது. இதனாலும், குப்பை எரிக்கப்படுவதாலும் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.

வேதி உரத்துக்கான செலவு அதிகரிப்பு, உரமிட்டும் மகசூல் குறைவாகக் கிடைப்பது போன்றவற்றால் விவசாயிகள் இயற்கை உரத்தை நாட ஆரம்பித்துவிட்டனர். அந்த இயற்கை உரத்தையும் சுயமாகவே தயாரித்துக்கொள்ளலாம் என்பதற்குத் தலக்காஞ்சேரி விவசாயிகள் முன்னுதாரணமாக இருக்கிறார்கள்.

ரசாயனத்துக்கு மாற்று

தான் சார்ந்திருக்கும் பகுதியில் ரசாயன உரங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருட்களால், உடல்நலம் எப்படியெல்லாம் கெட்டுப் போகும் என்பதை விவசாயிகளுக்கும் மக்களுக்கும் அறிவுறுத்திவருகிறார் தலக்காஞ்சேரியைச் சேர்ந்த பொன்னரசு. கடந்த 10 ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தை மேற்கொண்டுவரும் பொன்னரசு, ரசாயன உரங்களுக்கு மாற்றாகக் குப்பையிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கும் வழிமுறையைப் பொன்னரசு விவசாயிகளுக்குக் கற்றுத்தருகிறார்.

இயற்கை உரம் தயாரிப்பதற்கு விவசாயிகளுக்கு வழிகாட்டவே தலக்காஞ்சேரி அண்ணா மறுமலர்ச்சி ஆண்கள் சுயஉதவிக் குழுவைத் தொடங்கியிருக்கும் பொன்னரசு, குழுவின் செயல்பாடுகளைக் குறித்து விளக்கினார்:

உரம் தயாரிக்கும் குழு

“நான் ஐந்தரை ஏக்கரில் விவசாயம் செய்துவருகிறேன். என்னைப் போல் இயற்கை விவசாயத்தில் ஆர்வமுள்ள 13 விவசாயிகள் இணைந்து தொடங்கியதுதான், அண்ணா மறுமலர்ச்சி ஆண்கள் சுயஉதவிக் குழு.

குழுவின் மூலமாக ரசாயன உரத்துக்கு மாற்றாக இயற்கை உரம் தயாரிக்க முதலில் திட்டமிட்டோம். அதற்காக அரசு நிறுவனங்கள், வேளாண் பல்கலைக்கழகங்களில் நேரடிப் பயிற்சி பெற்றோம். தொடர்ந்து, ஊரில் சேரும் குப்பையை இயற்கை உரமாக மாற்ற முயற்சித்தோம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தலக்காஞ்சேரியை ஒட்டியுள்ள திருவள்ளூர் நகராட்சியின் குப்பை கிடங்கிலிருந்து, பழைய குப்பையை எடுத்து இயற்கை உரம் தயாரித்துவருகிறோம். பழைய மக்கும் குப்பையில் 60 சதவீதத்துக்கு மேல் அங்கக சத்துகள் இருப்பதே இதற்குக் காரணம்.

அமோக மகசூல்

உரம் தயாரிக்கும் நடைமுறையின் முதல் வேலையாகக் குப்பையின் மேல் `இ.எம்.’ என்ற நுண்ணுயிர் திரவத்தைத் தெளித்து, குப்பையில் உள்ள துர்நாற்றத்தை அகற்றுவோம். குப்பையில் கனஉலோகங்கள் இருந்தால், உரமாக்குவதில் பிரச்சினை ஏற்படலாம். ஆனால், பொதுவாகக் கனஉலோகங்கள் காணப்படுவதில்லை.

அதன்பிறகு குப்பையில் உள்ள கல், கண்ணாடி, ரப்பர், பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட தேவையற்ற கழிவு – மக்காத பொருட்களை அகற்றிவிட்டு, மணல் சலிக்கும் நான்கு மி.மீ. சல்லடை மூலம் சலிக்க வேண்டும். சலித்த பின் கிடைக்கும் கழிவுடன் உயிர்ச்சத்து உரத்தைச் சேர்த்து இயற்கை உரத்தை உற்பத்தி செய்கிறோம்.

சுமார் 60 டன் குப்பையிலிருந்து 30 டன் இயற்கை உரம் கிடைக்கும். ஒரு நாளைக்கு மூன்று முதல் ஐந்து டன்வரை தயாரிக்கலாம். இந்த இயற்கை உரத்தைப் பயன்படுத்துவதால் எங்கள் சுயஉதவி குழுவினர் பயிரிட்டுள்ள நெல், கரும்பு, வாழை மற்றும் மலர் உள்ளிட்ட பயிர்கள் அமோக மகசூலைத் தந்துவருகின்றன

மண் புழு உரம் தயாரிப்பு

 

       மூலப்பொருள் எங்கே கிடைக்கும்?
 • செம்மண் அல்லது கரிசல் மண்ணை விவசாய நிலங்களில் இருந்து வாங்கிக் கொள்ளலாம். சாணத்தை கால்நடை வளர்ப்போரிடம் வாங்கலாம்.
 •  விவசாயிகள் தங்கள் நிலப்பகுதியில் தோண்டிய குழியில் கழிவுகளையும் மண்ணையும் போட்டு மக்க வைத்திருப்பார்கள், அதை வாங்கிக் கொள்ளலாம்.
 •  மண்புழுக்கள் ஏற்கனவே மண்புழு உரம் தயாரிப்பவர்களிடம் கிடைக்கும்.
 •     மண் புழு உரம் தயாரிப்பது எப்படி?
 • மண் புழு உரம் அமைக்கும் தொட்டியில் அரை டன் செம்மண், அதற்கு மேல் ஒரு டன் காய்கறிக்கழிவு அல்லது மக்கிய மண்ணை பரப்ப வேண்டும். 20 நாள் கழித்து, அதன் மேல் ஒரு டன் மாட்டுச்சாணம் கொட்ட வேண்டும்.
 •  அடுத்த 10 நாளில் மாட்டுச்சாணத்தின் மேல் 5 ஆயிரம் மண் புழுக்களை விட வேண்டும். மேல் பகுதியில் தேங்காய் நார் பரப்பி, 2 நாளுக்கு ஒரு முறை தண்ணீர் தெளித்து வர வேண்டும்.
 •  ஒரு மாதத்தில் மேலிருந்து மண் புழுக்கள் உள்ளே ஊடுருவும். மேலேயுள்ள மண்ணைச் சாப்பிட்டு, வெளியாகும் கழிவுகள் உரங்களாக மேல் பகுதியில் படியும். ஒரு மாதத்திலிருந்து வாரம் ஒரு முறை மேற்புற மண், அதாவது மண்புழு உரத்தை அள்ள வேண்டும்.
 • படிப்படியாக மேற்புறம் அனைத்தும் மண்புழு கழிவுகளாக, உரமாக வந்து கொண்டிருக்கும். 3 மாத நிறைவில் கீழுள்ள செம்மண் பரப்புக்கு மண்புழுக்கள் சென்று விடும்.
 •  இதன் மூலம் 2 டன் பரப்புள்ள மண், சாணப்பரப்பில், கல், செத்தை கழிவுகள் போக ஒன்றரை டன் மண்புழு உரம் கிடைக்கும். இதற்கிடையில், மண் புழுக்கள் அனைத்தும் முட்டையிட்டு, சம எண்ணிக்கையில் புதிய மண்புழுக்கள் உருவாகியிருக்கும்.