வறட்சியும், விவசாயமும்

  வறட்சியும், விவசாயமும் வறட்சியை சமாளிக்க சரியான வழி, வறட்சியை தாங்கும் பயிர்களை சாகுபடி செய்வது தான். வறட்சியை தாங்கும் நெல் பயிர்களை கண்டுபிடித்து பயிரிட வேண்டும்   வழக்கறிஞர். கே. எஸ். இராதாகிருஷ்ணன். ‘விவசாயம் தான் நம் நாட்டின் முதுலும்பு. விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்’என்றெல்லாம் விவசாயிகளை பற்றிய சொல்லாடல்கள் இருந்தன. விடுதலைக்கு பின்னர் நாட்டின் 70 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பியே இருந்தனர். உலகமயமாதல், நகரமயமாதல், […]

விவசாய முன்னேற்றமே அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு

கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியும் பணவீக்க போக்கும் பற்றி சில நாட்களுக்கு முன்பு பார்த்தோம். இன்று இந்திய விவசாயத்துறையின் வளர்ச்சி பற்றி பார்ப்போம். அட்டவணையை பார்க்கும் போது இந்திய விவசாயத்துறை எப்போதுமே நிலையில்லாத வளர்ச்சியுடன்தான் இருக்கிறது என்று தெரிகிறது. மற்ற துறைகளில் உள்ள ஏற்றத்தாழ்வைவிட இத்துறையில் ஏற்றத்தாழ்வு அதிகம். பாசன வசதிகள் பெருகிவிட்டன, உயர்ந்த விதைகள், அதிக உரங்கள், நவீன தொழில்நுட்பம், அதிக ஆதாரவிலைகள் என்று பல கூறப்பட்டாலும், இன்னமும் பருவமழையின் தாக்கத்திலிருந்து விவசாயம் […]

ஒரு சென்ட் நிலத்தில் 8.1 டன் இயற்கை உரம் தயாரிப்பு முறை

நான்கடி அகலம், ஆறடி நீளம், மூன்றடி ஆழத்தில் அருகருகே 10 குழிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இக்குழி ஒரு டன் கழிவுகளைக் கொள்ளும் அளவில் இருக்கும். 750 கிலோ தாவரக்கழிவுகள், 250 கிலோ கால்நடைக் கழிவுகள் ஆகியவற்றை எடுத்து நன்றாகக் கலந்துகொள்ள வேண்டும். 36 லிட்டர் தண்ணீரில் 38 மில்லி இ.எம் ஊற்றி நன்றாகக் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். இ.எம் கிடைக்காத நிலையில் ஒரு கிலோ டிரைக்கோடெர்மா விரிடியை 36 லிட்டர் தண்ணீரில் கலந்துகொள்ளலாம். கழிவுகள் கலந்த கலவையை […]

மண் வளம்… எப்போது கவலைப்படப்போகிறோம்?

விவசாயிகளைப் பொறுத்தவரை, மண் பயிர் வளர்வதற்கான ஓர் ஊடகம், அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை, மண் பணத்தைக் கொட்டும் அமுதசுரபி. விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை, மண் ஓர் ஆய்வுக்கூடம். மண்ணுக்கு உயிர் இருக்கிறது. இதைப் பற்றி நாம் என்றைக்காவது சிந்தித்து இருக்கிறோமா? தன்னுள் வந்து விழும் அனைத்தையும் மக்க வைக்கும் மண், விதையை மட்டும் எப்படி முளைக்க வைக்கிறது? ஊசி முனையளவு உள்ள விதையிலிருந்து மாபெரும் ஆலமரத்தை உருவாக்கும் வித்தையை மண்ணைத் தவிர யாராலும் செய்ய முடியாது. ஆனால், மனிதர்கள் மண்ணை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. அந்த […]

மரபணு மாற்றப் பயிர்கள் தோல்வியுற்றன!

இந்தியாவில் பி.டி பருத்தி உள்ளிட்ட மரபணு மாற்ற பயிர்கள் தோல்வியுற்றுவிட்டதாக வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதன் துணை ஆசிரியராக பணியாற்றி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை ஒன்று அண்மையில் வெளியாகியது. இந்த அறிக்கை பி.டி பருத்தி பயிர் தோல்வியுற்றது என்று தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை குறித்து மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரான கே.விஜயராகவன் விமர்சித்துள்ளார். இந்த ஆய்வறிக்கையில் இந்தியாவில் பயிர் மேம்பாடு, மரபணு மாற்றப் பயிர்கள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக பி.டி பருத்தி, பி.டி […]

நைட்ரஜன் ஆபத்து!

ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் பிரான்டியர்ஸ் அறிக்கை என்கிற சுற்றுச்சூழல் அறிக்கை ஒன்றை வெளியிடுகிறது. 2019-ஆம் ஆண்டுக்கான பிரான்டியர்ஸ் அறிக்கையில் நைட்ரஜன் மாசு குறித்து ஒரு தனிப் பகுதியே அதில் சேர்க்கப்பட்டிருப்பது எந்த அளவுக்கு நைட்ரஜன் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துரைக்கிறது. நைரோபியில் கடந்த மார்ச் 4-ஆம் தேதி ஐ.நா.வின் சுற்றுச்சூழல் அவை வெளியிட்டிருக்கும் பிரான்டியர்ஸ் அறிக்கை சர்வதேச அளவிலான வேளாண் ஆய்வாளர்களையும், சூழல் ஆய்வாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. விலங்கின வளர்ப்பு, விவசாயம், போக்குவரத்து, தொழிற்சாலைகள், […]