அசுவிணிகள்

  தாக்குதலின் தன்மை இவை இலை மற்றும் வாழை மட்டைகளின் இடுக்குகளில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சி சேதம் விளைவிக்கின்றன. அசுவுணிகள் ஒரு வகை தேன் போன்ற திரவத்தைச் சுரப்பதால் அதைச் சுற்றி எந்நேரமும் எறும்புகள் மொய்த்துக் கொண்டிருக்கும். அசுவுணிகள் கும்பலாக வாழையின் மீது அமர்ந்து சாற்றை உறிஞ்சுவதால் வளர்ச்சி பாதிக்கப் படுகின்றது.‌ இளம் பருவத்தில் நோய் தாக்கிய வாழைக்கன்றுகள் முட்டையாகவும், இலைகள் சிறுத்தும், இலை நரம்புகள் தடித்தும் காணப்படும். வா‌ழையில் அதிக அளவு சேதம் ஏற்படுத்தும் […]

பூச்சிக்கொல்லி மருந்து சிகிச்சை

களை எடுக்கும் பருவத்தில் இலை உறைக் கருகல் நோய் தாக்க வாய்ப்பு உண்டு. அந்நோய் தாக்காமல் நெற்பயிரைக் கட்டுப்படுத்தும் முறைகளை வேளாண்துறை அறிவித்துள்ளது. அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் வாகைக்குளம், பிரம்மதேசம், மன்னார்கோவில், சிவந்திபுரம், விக்கிரமசிங்கபுரம் பகுதியில் நெல் பயிரில் இலை உறைக் கருகல் நோய் பரவலாக ஆங்காங்கே காணப்படுகிறது. இந்நோயை விவசாயிகள் கட்டுப்படுத்த கீழ்கண்ட முறைகளைப் பின்பற்ற வேண்டும். நோய் பரவும் காரணிகள் வயல் வெளிகளிலும், சுற்றுப்புறங்களிலும் நிரந்தரமாகக் காணப்படும் புல் மற்றும் களைச் செடிகளில் இருந்து இந்த […]

சிறுநீரில் இருந்து கிடைக்கும் உரம் (struvite)

சிறுநீரில் இருந்து struvite எனப்படும் உரத்தை பிரித்து எடுக்கலாம் என்பதை பற்றி முன்பு படித்து உள்ளோம். நேபாளில் எளிமையான இயந்திரங்களை கொண்டு சிறுநீரில் இருந்து உரத்தை பிரித்து எடுக்கும் முறையை பற்றிய ஒரு வீடியோ இங்கே பார்க்கலாம். இந்த ஆராய்ச்சி சுவிட்சர்லாந்தில்  உள்ள பல்கலை கழகத்தால் செய்ய பட்டது வீடியோ முடிவில் struvite  மூலம் சாகுபடி செய்யப்பட்ட  மா,காய்கறிகளை பார்க்கலாம். நம் நாட்டில் பஸ் ஸ்டாண்ட் மற்றும்  ரயில் நிலையங்களில் சிறுநீரை சேகரித்து இந்த தொழிற்நுட்பம் மூலம் struvite தயாரித்தால் […]

பார்த்தீனியம் செடியை உரமாக்குவது எப்படி?

தர்மபுரி மாவட்டத்தில், விவசாய நிலங்களில், பார்த்தீனியம் செடிகள் அதிகளவு வளர்ந்துள்ளது. இதனால், அந்த செடிகளை எப்படி உரமாக மாற்றுவது என்பது பற்றி, வேளாண் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில், நெல், கரும்பு, தக்காளி, மஞ்சள், மரவள்ளி கிழங்கு, பருத்தி மற்றும் கேழ்வரகு, சாலை உள்ளிட்ட பயிர்கள் மற்றும் தென்னை அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. காய்கறிகள் மற்றும் மலர் வகைகளும் குறிப்பிட்டு அளவு, சாகுபடி நடக்கிறது Courtesy: Hindu               […]

பூண்டு கழிவுகளில் இயற்கை உரம்

பெரியகுளம் பகுதியில் குப்பைக்கு போகும் வெள்ளைப்பூண்டு கழிவுகளை, இயற்கை உரமாக்கி, விவசாயிகள் மகசூலை அதிகரிக்கின்றனர். வடுகபட்டி, தாமரைக்குளம் பகுதிகளில் தொடர்ந்து ரசாயண உரங்கள் பயன்படுத்தப்பட்ட நிலங்கள், ஐந்தாண்டுகளுக்கு பிறகு வளம் குறைந்து விளைச்சல் பாதிக்கிறது. அதன் பிறகு விவசாயிகள் மண்பரிசோதனை செய்து மண்ணின் வளத்தை அதிகப்படுத்த சிரமப்படுகின்றனர்.         இதை தவிர்க்க, விவசாயிகள் மண்ணை உழுது இயற்கை உரங்களான மாட்டுசாணம், புண்ணாக்கு கரைசல் ஆகியவற்றை போட்டு, சணம்பு உள்ளிட்ட கீரைச்செடிகளை பயிர் செய்கின்றனர். […]

செலவின்றிக் கிடைக்கும் இயற்கை உரம்!

குப்பைக் கிடங்கில் சேகரமாகும் குப்பை பண மதிப்பற்றதாகக் கருதப்படுகிறது. குப்பையைச் சரியாகப் புரிந்துகொள்ளாததால்தான் இப்படி நினைக்கிறோம். கழிவும் காசாகும் என்று செயல்படுத்திக் காட்டியிருக்கிறார்கள் திருவள்ளூர் அருகேயுள்ள தலக்காஞ்சேரி விவசாயிகள். உள்ளாட்சி அமைப்புகள் குப்பையைச் சேகரிக்கவும், பிறகு எடுத்துச் செல்வதற்கும், சேமிப்பதற்கான இடத்துக்கும் பெரும் செலவு செய்கின்றன. குப்பைக் கிடங்குகளால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது, துர்நாற்றம் வீசுகிறது, கொசு உற்பத்தி அதிகரிக்கிறது, நோய்கள் பெருக வழிவகுக்கிறது. குப்பை கொட்ட இடமில்லாத நிலையில், சாலையோரங்கள், நீர்நிலைகள் போன்ற இடங்களிலும் குப்பை […]

மண் புழு உரம் தயாரிப்பு

         மூலப்பொருள் எங்கே கிடைக்கும்? செம்மண் அல்லது கரிசல் மண்ணை விவசாய நிலங்களில் இருந்து வாங்கிக் கொள்ளலாம். சாணத்தை கால்நடை வளர்ப்போரிடம் வாங்கலாம்.  விவசாயிகள் தங்கள் நிலப்பகுதியில் தோண்டிய குழியில் கழிவுகளையும் மண்ணையும் போட்டு மக்க வைத்திருப்பார்கள், அதை வாங்கிக் கொள்ளலாம்.  மண்புழுக்கள் ஏற்கனவே மண்புழு உரம் தயாரிப்பவர்களிடம் கிடைக்கும்.     மண் புழு உரம் தயாரிப்பது எப்படி? மண் புழு உரம் அமைக்கும் தொட்டியில் அரை டன் செம்மண், அதற்கு […]