தர்மபுரி மாவட்டத்தில், விவசாய நிலங்களில், பார்த்தீனியம் செடிகள் அதிகளவு வளர்ந்துள்ளது. இதனால், அந்த செடிகளை எப்படி உரமாக மாற்றுவது என்பது பற்றி, வேளாண் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில், நெல், கரும்பு, தக்காளி, மஞ்சள், மரவள்ளி கிழங்கு, பருத்தி மற்றும் கேழ்வரகு, சாலை உள்ளிட்ட பயிர்கள் மற்றும் தென்னை அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. காய்கறிகள் மற்றும் மலர் வகைகளும் குறிப்பிட்டு அளவு, சாகுபடி நடக்கிறது

Courtesy: Hindu
Courtesy: Hindu

 

 

 

 

 

 

 

 

இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், விவசாய நிலங்களில், பார்த்தீனியம் செடி வேகமாக பரவி வருகிறது. இதனால், விவசாய சாகுபடி குறைந்து வருவதுடன், கால்நடைகளும், விவசாயிகளும், பாதிக்கப்பட்டு வரும் அவல நிலை உள்ளது. இதுகுறித்து, வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:

  • உழவியல் முறைப்படி, இளம் பார்த்தீனியம் செடிகளை, கையால் வேரோடு பறித்து, எரித்து விடலாம்.
  • பார்த்தீனியம் செடிகளை பூப்பதற்கு முன், மக்கவைப்பத்தின் மூலம், விதைகளின் முளைப்பு திறனை அழிக்கலாம்.
  • இந்த முறையில், பார்த்தீனியம் செடிகளை கத்தி மூலமாக, சிறு சிறு துண்டுகளாக வெட்டி, தரையில், 10 செ.மீ., உயரத்துக்கு அடுக்க வேண்டும்.
  • அதன் மேல், டிரைக்கொடெர்மா விரிடி, பூஞ்சான காரணியை பரப்பி அதன் மேல் அரை சதம் யூரியா கரைசலை தெளிக்க வேண்டும்.
  • இவ்வாறு, ஒரு மீட்டர் உயரத்துக்கு அடுக்கி, மண்ணை கொண்டு பூசி மூடவேண்டும். இரு வாரங்களுக்கு பின், ஒரு முறை நன்றாக கிளறி விடவேண்டும். இதன் மூலம், 40 நாட்களில், இது, சத்துமிக்க உரமாகி விடுகிறது.
  • இவ்வாறு தயாரிக்கப்படும் மக்கிய உரத்தை, எல்லா பயிர்களுக்கும் இடலாம். இந்த முறையில் பார்த்தீனியம் கட்டப்படுத்தவதோடு, அவற்றை உரமாக மாற்றுவதன் மூலம் இரட்டிப்பு பயன் அடையமுடியும்.

பார்த்தீனியம் சிலருக்கு அலர்ஜி உண்டாக்கும். அவர்களுக்கு மூச்சி திணறல், தோல் பிரச்னைகள், தும்மல், ஜுரம்  வரலாம். உங்களக்கு இந்த பிரச்னை இருந்தால் பார்த்தீனியம் அருகே செல்லாதீர்கள். இந்த அலர்ஜி இல்லாதவர்களிடம் கூறி செடிகளை பிடுங்க சொல்லுங்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *