தாக்குதலின் தன்மை
 • இவை இலை மற்றும் வாழை மட்டைகளின் இடுக்குகளில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சி சேதம் விளைவிக்கின்றன.

 • அசுவுணிகள் ஒரு வகை தேன் போன்ற திரவத்தைச் சுரப்பதால் அதைச் சுற்றி எந்நேரமும் எறும்புகள் மொய்த்துக் கொண்டிருக்கும்.

 • அசுவுணிகள் கும்பலாக வாழையின் மீது அமர்ந்து சாற்றை உறிஞ்சுவதால் வளர்ச்சி பாதிக்கப் படுகின்றது.‌

 • இளம் பருவத்தில் நோய் தாக்கிய வாழைக்கன்றுகள் முட்டையாகவும், இலைகள் சிறுத்தும், இலை நரம்புகள் தடித்தும் காணப்படும்.

 • வா‌ழையில் அதிக அளவு சேதம் ஏற்படுத்தும் ‘முடிக்கொத்து’ நோயைப் பரப்பும் காரணிகளாக இவை இருக்கின்றன.

 

பூ‌‌‌‌‌‌‌‌‌‌‌ச்சியை கண்டறிதல்

முட்டைகள்: அசுவுணிகள் முட்டையிடுவது இல்லை நேரடியாகக் குஞ்சுகளை பொரிக்கின்றன.
இளம் குஞ்சுகள்: நீள்வட்ட வடிவில் சற்று நீண்டிருக்கும். செம்பழுப்பு நிறத்தில் ஆறு பிரிவுகளுடைய உணர் கொம்புகளைக் கொண்டிருக்கும்.
முதிர் பூச்சிகள்: சிறிய மற்றும் நடுத்தர அளவுடைய அசுவுணிகள் சிவப்‌பு முதல் அடர் பழுப்பு, பளபளப்புடன் சிலசமயங்களில் கருமை நிறத்தில் காணப்படும். இ‌‌வையும் ஆறு பிரிவுடைய உணர் கொம்புகளை‌யும், நன்கு தெரியக் கூடிய நரம்புகளையும் பெற்றிருக்கும்.
முதிர்ந்த பெண் பூச்சிகள் ஒவ்வொரு நாளும் (முதிர்ச்சியடைந்த பின்) குஞ்சு பொரிக்கின்றன. நாளொன்றுக்கு 4 என்ற விதம் இதன் வா‌‌‌‌ழ்நாளில் 14 நாட்கள் வரை ஒரு பெண் அசுவுணி உற்பத்தி செய்கின்றது.

 

கட்டுப்பாடு முறைகள்
உழவியல் முறைகள்
 • வயலைச் சுத்தமாகப் பராமரிக்க‌‌‌வும்.
 • ஆரோக்கியமான கன்றுகளைத் தேர்வு செய்து நடவும்.
 • தாக்கப்பட்டுள்ள வாழைகளை கண்ட தருணத்திலேயேய வயலிலிருந்து அகற்றி அழிக்கவும்.
 • இவ்வயல்களில் மறுதாம்பு விடுவது மற்றும் ஊடுபயிர் சாகுபடி செய்தல் கூடாது.
 • நடவு செய்வதற்கு பூச்‌சித் தாக்குதலற்ற நல்ல பயிரிலிருந்து கன்று எடுக்கவும்.
 • வாழை இலை மற்றும் பூவினை 49 செ வெந்நீரில் 10 நிமிடங்கள் வைத்திருந்தால் அசுவுணிகள் இறந்துவிடும்.
இரசாயன முறைகள்
 • இளம் கன்றுகள், இலை, இலை காம்புகள், சுருண்ட இலை ஆகியவற்றின் மீது சோப்பு தண்ணீர் அல்லது பூச்சிக் ‌கொல்லிக‌ளுடன் சோப்புநீர் கலந்து தெளிக்கவும்.
 • டைமெத்தோயேட் (75மிலி/100லி) அல்லது டையசினோன் (1.5மி.லி/லி) அல்லது அசிப்பேட் (1.3கி/லி) பாதிக்கப்பட்ட பயிர் மற்றும் கன்றுகளின் மீது தெளிக்கவும்‌.
 • மெத்தில் டெமட்டான் 25 இ.சி 0.05.‌% அல்லது மோனோகுரோட்டோபாஸ் 36 எஸ் எல் 0.072% தெளிக்கவும்.
 • மோனோகுரோட்டோபாஸ் 36 எஸ்.எஸ்/ 1 மிலி/ வாழை (1 மிலி/4 மிலி நீரில் கலந்தது) ஊசி ‌‌மூலம் செலுத்தவும். வா‌‌‌‌ழையில் பூ வெளி வந்திருந்தால் ஊசி இடுவதைத் தவிர்க்கவும்.
‌உயிரியல் கட்டுப்பாடு
 • பிரக்கோனிட் குளவிகளான லைசிமெலிபிய‌ஸ் டெஸ்‌டாசெயிபஸ் என்ற ஒட்டுண்ணியை வயலில் விடவும்.
 • மேலும் பொறி வண்டுகள், கண்ணாடி இழை இறக்கைப் பூச்சி போன்றவை அசுவுணிகளை அதிகம் விரும்பி உண்ணக்கூடியவை.
 • பூஞ்சான் வகையைச் சார்ந்த பிவே‌ரியா பேசியானாவையும் வாழை வயலில் விடலாம்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *