வறட்சியும், விவசாயமும்

  வறட்சியும், விவசாயமும் வறட்சியை சமாளிக்க சரியான வழி, வறட்சியை தாங்கும் பயிர்களை சாகுபடி செய்வது தான். வறட்சியை தாங்கும் நெல் பயிர்களை கண்டுபிடித்து பயிரிட வேண்டும்   வழக்கறிஞர். கே. எஸ். இராதாகிருஷ்ணன். ‘விவசாயம் தான் நம் நாட்டின் முதுலும்பு. விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்’என்றெல்லாம் விவசாயிகளை பற்றிய சொல்லாடல்கள் இருந்தன. விடுதலைக்கு பின்னர் நாட்டின் 70 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பியே இருந்தனர். உலகமயமாதல், நகரமயமாதல், […]

விவசாய முன்னேற்றமே அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு

கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியும் பணவீக்க போக்கும் பற்றி சில நாட்களுக்கு முன்பு பார்த்தோம். இன்று இந்திய விவசாயத்துறையின் வளர்ச்சி பற்றி பார்ப்போம். அட்டவணையை பார்க்கும் போது இந்திய விவசாயத்துறை எப்போதுமே நிலையில்லாத வளர்ச்சியுடன்தான் இருக்கிறது என்று தெரிகிறது. மற்ற துறைகளில் உள்ள ஏற்றத்தாழ்வைவிட இத்துறையில் ஏற்றத்தாழ்வு அதிகம். பாசன வசதிகள் பெருகிவிட்டன, உயர்ந்த விதைகள், அதிக உரங்கள், நவீன தொழில்நுட்பம், அதிக ஆதாரவிலைகள் என்று பல கூறப்பட்டாலும், இன்னமும் பருவமழையின் தாக்கத்திலிருந்து விவசாயம் […]

எள் பயிரிட்டால் கூடுதல் லாபம்!

தமிழ்நாட்டில் தற்போது பல மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ள போதிலும் மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களில் போதிய அளவு மழை பெய்யவில்லை. ஏரிகளில் இன்னும் பாதியளவு கூட நீர் இருப்பு இல்லாத நிலையே காணப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் விவசாயிகள் தங்கள் வயல்களில் எண்ணெய் வித்துப் பயிரான எள்ளைப் பயிரிட்டால் அது நிலைத்து நின்று, குறைந்த நீரிலும் அதிக மகசூலைக் கொடுத்து வருமானம் தரும் என வேளாண்மைத் துறையினர் ஆலோசனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டார வேளாண் […]

நிலத்தையும் மனிதனையும் காப்பாற்றும் இயற்கை விவசாயம்

இயற்கை விவசாயத்தை அரசு ஊக்குவித்தால், பேச்சுவழக்கில் உள்ள இயற்கை விவசாயம், எதிர்காலத்தில் நிலத்தையும் மனித உடல் ஆரோக்கியத்தையும் நிச்சயம் காப்பாற்றும் என்று நெல் திருவிழாவில் விவசாயிகள் தெரிவித்தனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆதிரெங்கம் கிராமத்தில் கடந்த 4, 5-ம் தேதிகளில் ‘நமது நெல்லைக் காப்போம்’ என்ற பாரம்பரிய நெல் திருவிழா கிரியேட் அமைப்பு சார்பில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாமல் கேரளம், தெலங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களிலிருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். […]

விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள்

சலுகைகள் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், தரமானச் சான்று பெற்ற நெல் விதைகள் ஒரு கிலோவுக்கு ரூ. 10 மானிய விலையில் வழங்கப்படுகிறது. இதுதவிர, விவசாயக் கூலித் தொழிலாளர்களின் பற்றாக்குறை காரணமாக இயந்திரமயமாக்குதலை ஊக்குவிக்கும் வகையில் நடவு இயந்திரம் கொண்டு நெல் நடவு செய்பவர்களுக்கு ஓர் ஏக்கருக்கு ரூ. ஆயிரத்து 500 மானியம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பசுந்தாள் உர பயிர் விதைகள் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது. விதைக் கிராமத் திட்டத்தின் கீழ் […]

விவசாய சந்தேகங்களை விளக்கும் தொடுதிரை மையம்

மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் விவசாயிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் வேளாண் தொடுதிரை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த தொடுதிரையை செயல்படுத்த தொடங்கியவுடன் கீரைகள், தானியங்கள், பணப்பயிர்கள், பயறு வகைகள், காய்கள், மலர்கள் உள்ளிட்டவற்றின் பெயர்கள் வருகின்றன. பின்னர் அதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்தவுடன் அவற்றில் உள்ள வகைகள் குறித்த விவரங்கள் வெளியாகின்றன. எடுத்துக்காட்டாக, கீரையை தேர்வு செய்தால் அதில் சிறுகீரை, பசலைக்கீரை, அகத்திக்கீரை, லெச்சகெட்டான் கீரை, கொத்தமல்லி கீரை, பாலக்கீரை, […]

சிறுநீரில் இருந்து கிடைக்கும் உரம் (struvite)

சிறுநீரில் இருந்து struvite எனப்படும் உரத்தை பிரித்து எடுக்கலாம் என்பதை பற்றி முன்பு படித்து உள்ளோம். நேபாளில் எளிமையான இயந்திரங்களை கொண்டு சிறுநீரில் இருந்து உரத்தை பிரித்து எடுக்கும் முறையை பற்றிய ஒரு வீடியோ இங்கே பார்க்கலாம். இந்த ஆராய்ச்சி சுவிட்சர்லாந்தில்  உள்ள பல்கலை கழகத்தால் செய்ய பட்டது வீடியோ முடிவில் struvite  மூலம் சாகுபடி செய்யப்பட்ட  மா,காய்கறிகளை பார்க்கலாம். நம் நாட்டில் பஸ் ஸ்டாண்ட் மற்றும்  ரயில் நிலையங்களில் சிறுநீரை சேகரித்து இந்த தொழிற்நுட்பம் மூலம் struvite தயாரித்தால் […]